ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI" - மீண்டும் விமர்சித்த ஹெச்.ராஜா!

"STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI" - மீண்டும் விமர்சித்த ஹெச்.ராஜா!

முதலமைச்சர் ஸ்டாலின், ஹெச்.ராஜா

முதலமைச்சர் ஸ்டாலின், ஹெச்.ராஜா

அவ்வையார், பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் படித்தது அவைக்குறிப்பில் இருக்காது என்கிறார் - ஹெச்.ராஜா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என ஒரு ஆண்டுக்கு முன்னே சொன்னதை தற்போது முதல்வர் ஸ்டாலின் நிருபித்துக்கொண்டு வருகிறார் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள 18 சித்தர் கோவில் கும்பாபிஷே விழாவிற்கு வருகை தந்த பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநர் விவகாரம் பற்றி கேட்டபோது, “ சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். முதலமைச்சர் பேசியது மரபு அல்ல. இந்த மாதிரி ஏற்பு இல்லாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் ஆகிய மாநிலங்களில் பேசியுள்ளனர்.கவர்னர் அவர்கள் இந்த ஊழல் அரசாங்கத்தை பற்றி உரையில் கூறமால் தவிர்த்துவிட்டு சென்றதற்கு ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அவ்வையார், பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் படித்தது அவைக்குறிப்பில் இருக்காது என்கிறார். இதுதான் திராவிட மாடல் அமைதி பூங்கா, இது எல்லாம் இருக்கும் என கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

STALIN IS MORE DANGEROUS THAN KARUNANIDHI  என ஒரு ஆண்டுக்கு முன்னே சொன்னதை தற்போது முதல்வர் ஸ்டாலின் நிருபித்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் IS MOST IMMATURE CHIEF MINISTER என நிரூபணம் ஆகி உள்ளது. முதலமைச்சர் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்பார் தன்னை திருத்திக் கொள்வார் என பாஜக நினைகிறது” என கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, HRaja, RN Ravi