கோவை மாநகருக்கான பெருநகர வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழாய்வு கண்காட்சி மற்றும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க ஒவிய கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில், மயிலாடும்பாறை, கொடுமணல், கீழடி மற்றும் பொருநை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதைத்தொடர்ந்து தனியார் நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என பாராட்டினார்.
Also read... கருணாநிதிக்கு சிலை வைக்க தடை.. திருவண்ணாமலை ஆட்சியர் பதில் மனுவால் உயர்நீதிமன்றம் அதிருப்தி..
அரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம் என்றும் சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்வதாகவும் கூறினார்.
மேலும் கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்த அவர், இந்த அரசு ஆட்சிபொறுப்பேற்ற பின் 69,325 கோடி முதலீட்டில் 2,25,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 131 புரிந்துணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாற்றப்பட இருக்கின்றது என தெரிவித்த அவர், விண்வெளி , ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் வளர்ச்சியடைந்து தொழில் துறையின் ‘நியு ஹப்பாக’ கோவை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Coimbatore