Home /News /tamil-nadu /

கடுகில் ஸ்டாலின்... அசத்தல் ஓவியத்தை முதலமைச்சருக்கு பரிசளித்த ஓவியர்..!

கடுகில் ஸ்டாலின்... அசத்தல் ஓவியத்தை முதலமைச்சருக்கு பரிசளித்த ஓவியர்..!

கடுகில் ஸ்டாலின்

கடுகில் ஸ்டாலின்

ஓவியக்கலை பல்வேறு பரிமாணங்களை அடைந்து வரும் சூழலில் கோவையில் மிகச்சிறிய கடுகில் ஓவியத்தைப் படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

    கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சருக்கு ஓவியர் ஒருவர் கடுகில் முதலமைச்சரின் படத்தை ஓவியமாக வரைந்து இருந்ததை பரிசாக அளித்தார்.

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப சிறிய கடுகில் முதல்வர் ஸ்டாலினின் படத்தை வரைந்த ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்த வெங்கடேஷ், முதல்வர் கலந்து கொண்ட வ.உ.சி கண்காட்சியில் அவருக்கு ஓவியத்தை பரிசாக அளிக்க வந்தார். அதனுடன் ஓவியர் வெங்கடேஷ் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்கை கதையை சுருக்கம் செய்து அந்த கதையினை எழுத்து வடிவங்களில் ஒரு அடி அளவில் அவர் உருவத்தில் ஓவியமாக வரைந்திருந்தார்.



    இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கண்காட்சியில் வைத்து முதல்வருக்கு கடுகில் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தார்.

    இதையும் படியுங்கள் |  செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் முதல்வர் ஸ்டாலின் - லியோனி சர்ச்சை பேச்சு

    தொடர்ந்து ஓவியத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். ஓவியக்கலை பல்வேறு பரிமாணங்களை அடைந்து வரும் சூழலில் கோவையில் மிகச்சிறிய கடுகில் ஓவியத்தைப் படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : ஜெரால்ட்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி