• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் மத்திய குழுவின் ஆய்வு இருக்க வேண்டும்: ஸ்டாலின்

மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் மத்திய குழுவின் ஆய்வு இருக்க வேண்டும்: ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ள 15ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை போதாது என்றும் கூடுதலால நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின். அப்போது  மத்தியகுழு இரவு நேரத்தில் ஆய்வுக்கு சென்ற போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் மத்தியகுழு முறையாக பாதிப்புகளை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    பிரதமர் மோடி இதுவரை தமிழக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வராதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆய்வுகாக வரக்கூடும் என்று விமர்சித்தார்.

    கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ள 15ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை போதாது என்றும் கூடுதலால நிதியினை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு விரைந்து நிவாரண தொகையினை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: