CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்... ஸ்டாலின் வலியுறுத்தல்!

CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்... ஸ்டாலின் வலியுறுத்தல்!
திமுக தலைவர் ஸ்டாலின்
  • News18
  • Last Updated: February 17, 2020, 11:46 AM IST
  • Share this:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

15-வது சட்டப்பேரவையின் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள், அதற்கு பதில் அளிக்கும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகிறது. அப்போது சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாட்டோம்” என இந்த அரசு அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த சபாநாயகர், ”குடியுரிமைத் திருத்தச்  சட்டம் குறித்து பேச வேண்டாம். வண்ணாரப்பேட்டை விவகாரம் குறித்து மட்டும் பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also see...
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading