Home /News /tamil-nadu /

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது கிடைத்த வரவேற்பு ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது - ஆர்.எஸ்.பாரதி.0

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது கிடைத்த வரவேற்பு ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது - ஆர்.எஸ்.பாரதி.0

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

'எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல உண்மைகள் விரைவில் வெளியாகும்' - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கிடைத்த வரவேற்பு ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல உண்மைகள் விரைவில் வெளியாகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தன்னுடைய வயிற்று எரிச்சலை வெளிப்படுத்துகின்ற வகையில் உரையாற்றியுள்ளார்.

  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி என்னென்ன பேசினாரோ அதை அப்படியே எடுத்து பழனிச்சாமி என்ற பெயரை மட்டும் அடித்து விட்டு மு.க ஸ்டாலின் என போட்டு பேசியுள்ளார். யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. 15 மாத ஸ்டாலின் ஆட்சியை மக்களின் செல்வாக்கை பொறுத்துக் கொள்ளாமல் அவருடன் இருக்கக்கூடிய தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏதோ பேசுகிறார். மறைந்த எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இளைஞர்கள் வயதானவர்கள் எனக்கூடி ஆண்கள் பெண்கள் என  வர வேற்றார்களோ, அதேபோல தளபதி செல்லும் இடமெல்லாம் வரவேற்பு என்றார்.

  கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது விரைவில் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல உண்மைகள் வெளியாகும். சொத்து வரி கூட்டியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். இதற்கு யார் காரணம் என்பது தொடர்பாக சட்ட சபையில் எதிர்க்கட்சி முன்னிலையிலே மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

  ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி காலத்தில் 36 ,000 கோடி என்ற மின்சாரத்துறை கடனை 1.75 கோடியாக அதிமுக ஆட்சி காலத்தில் உயர்த்தி விட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உட்கட்சி விவகாரங்களை திசை திருப்பவும் எடப்பாடி மீதுள்ள கோடநாடு வழக்கை திசை திருப்பவே என்றார். மேலும் வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன், கோடநாடு வழக்குகளில்  திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நடுரோட்டில் பிச்சைக்காரன் ஆக முன்னாள் கொலை குற்றவாளியாக இருந்த ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது ஜெயலலிதா அம்மையாரால் நடந்த பலன்.

  ALSO READ | ’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்! 
   அதிமுகவின் ஒவ்வொரு அமைச்சர்களும் எலிசபெத் மகாராணியின் வீட்டை விட பெரிதாக கட்டியுள்ளனர்.பக்கிங் காம் வீட்டை பார்ப்பது போல் உள்ளது விஜயபாஸ்கரன் வீடு. எடப்பாடியின் பினாமி  அண்மையில் விசாரிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் இவரைப் பற்றிய உண்மையான தகவல்கள் வர உள்ளன.தற்போது நடைபெற்றுள்ள திமுகவின் 15 மாத ஆட்சி காலத்திலும் அதிமுகவின் ஆட்சிக்காலத்திலும் எத்தனை கொலை கொள்ளைகள் நடந்துள்ளது என்பது பற்றி விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

   

  திமுக ஆட்சியில் நான்கு தலைமை இருப்பதாக எடப்பாடி தெரிவித்தார் ஆனால் அவர்கள் நிலைமை என்னவென்றால் இபிஎஸ்,ஓபிஎஸ்,சசிகலா,டி,டி, வி தினகரன் ஆகிய நான்கு பேரை மனதில் வைத்து பேசியுள்ளார் என்றார்.இவர்கள் நான்கு பேருக்குள் தான் கட்சியை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சனை உள்ளது.
  இது தொடர்ந்தால் திமுக தெருத் தெருவாக சென்று தெருமுனை கூட்டங்கள் நடத்த தயார். இவர் காலத்தில் கஞ்சா விற்று கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை தான் காவல்துறை இப்போது பறிமுதல் செய்து வருகிறது.

  திமுக வின் 15 மாத கால ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளை புள்ளி விவரங்களோடு விரைவில் வெளியிட்டு இவர்களது முகமூடியை கிழித்தெறிவோம் என்றார்.

  ALSO READ | நாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு
   கொடநாடு கொள்ளை கொலை வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுவதாக ஓபிஎஸ்  ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு கிராம மக்களிடம் கருத்து கேட்பு நடைபெறும் அவர்களின் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாட்டை பொருத்தே, திட்டத்தை செயல்படுத்துவோம் இல்லை என்றால் நிறுத்தி விடுவோம். நிர்மலா சீதாராமன், தெனாலிராமன் போல் பேசக்கூடாது என தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin, DMK executive RS Bharadhi

  அடுத்த செய்தி