Home /News /tamil-nadu /

7 ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை, தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

7 ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை, தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளார்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

7 ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை, தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெற்றது.

  இதனையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்புகொடி ஏற்றி கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதாகவும், இப்போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல என்றும், இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்றார்.

  நேரு இந்தியா முழுவதும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி பல லட்சம் கோடி வருமானம் ஈட்டியதாகவும், ஆனால் வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை பா.ஜ.க விற்பதாக குற்றம் சாட்டினார்.

  விரைவில் மக்கள் விரோத பாஜக கொண்டுவந்த தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜிஎஸ்டி மூலம் வியாபாரிகளையும் பொதுமக்களையும் கொள்ளையடிப்பதற்காக பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது எனவும், பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத வரி விதிப்பது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.

  Also read: எனக்கு கொழுந்தியாள் இல்லை.. மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? பி.டி.ஆர் ஆவேசம்

  மேலும், ஏழு ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளதாகவும், ஸ்டாலினை பின்பற்றி பிரதமர் மோடி பெட்ரோல் வரியை படிப்படியாக குறைத்தால், நமது பொருளாதாரம் மேம்படும் என்றார். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து தவறானது எனவும், திமுக அரசு ஒரு தெளிவான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

  ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், செயல் தலைவருமான ஜெயக்குமார் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு திருடர் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கொரோனாவை காரணம் காட்டி பிரதமர் எடுத்துக்கொண்டு, அதற்கு கணக்கு கொடுக்கமாட்டேன், தணிக்கைக்கு உட்படுத்தமாட்டேன் என சொல்வது திருட்டுத்தனம் என்றும், இந்த திருட்டுத்தனமான ஆட்சியை அகற்றுவோம் என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, Congress, DMK, K.S.Alagiri, News On Instagram, PM Modi

  அடுத்த செய்தி