ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்

ரிசர்வ் வங்கியானது கூட்டுறவு வங்கிகளை கைப்பற்றுவது ஆரோக்கியமற்ற செயல் என ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • Share this:
கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநில உரிமைகள், விவசாயிகள் கடன் பெறும் வசதி, சலுகைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.Also read... ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எட்டாவது முறையாக காலநீட்டிப்பு

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மாநிலங்களில் - குறிப்பாக மாவட்ட அளவில் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபடும், கூட்டுறவு வங்கிகளை கைப்பற்றுவது ஆரோக்கியமற்ற செயல் என ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading