மம்தா பானர்ஜிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கிய மு.க.ஸ்டாலின்!

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தில் நாளை கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.

news18
Updated: August 6, 2019, 9:00 PM IST
மம்தா பானர்ஜிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கிய மு.க.ஸ்டாலின்!
மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின்
news18
Updated: August 6, 2019, 9:00 PM IST
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த தி.மு.க தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தில் நாளை கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவில் பங்கேற்பதற்கு மம்தா பானர்ஜிக்கு சிறப்பு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பு ஏற்று, மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார்.

அவரை, தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். அவர், சென்னை ஐ.டி.சி நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அவரை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் தங்களது மரியாதையை பறிமாறிக் கொண்டனர். அப்போது, மம்தா பானர்ஜிக்கு, திருவள்ளுவர் சிலையை மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.


முன்னதாக விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் என்னை அழைத்தார். தமிழகத்துக்கு வந்துள்ளளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...