27 பரிந்துரைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை - ஸ்டாலின்

news18
Updated: February 13, 2018, 1:26 PM IST
27 பரிந்துரைகளை அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வு தேவையில்லை - ஸ்டாலின்
முதல்வர் கே.பழனிசாமியிடம் பரிந்துரைகளை வழங்குகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
news18
Updated: February 13, 2018, 1:26 PM IST
திமுக அளித்துள்ள  27 பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தினால் பஸ் கட்டண உயர்வே தேவையில்லை என்று  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆராய சமீபத்தில் திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. போக்குவரத்து கழக நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்த அறிக்கையை இந்தக் குழு நேற்று ஸ்டாலினிடம் வழங்கியது. இதைத்தொடர்ந்து இந்த பரிந்துரைகளை முதல்வரிடம் வழங்குவதற்காக ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார். அதன்ன்படி இன்று முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்த 27 பரிந்துரைகள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டாலின் கூறியதாவது:  டீசல் மீதான மதிப்புகூட்டு வரியை ரத்து செய்ய யோசனை கூறப்பட்டுள்ளது.  போக்குவரத்து கழக இழப்பீடுகளை அரசே ஏற்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் கமிஷன் வாங்காமல் இருந்தாலே நஷ்டம் ஏற்படாது. திமுகவின் அறிக்கையில் உள்ள 27 பரிந்துரைகளை அமல்படுத்தினால் தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வே தேவையில்லை. இந்த 27 பரிந்துரைகளையும் அமல்படுத்துமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால்  திமுகவின் அறிக்கையை அளித்த பிறகு முதல்வர் தரப்பில் இருந்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்