லட்சக்கணக்கான விவசாயிகள் உங்களால் பயனடைந்திருக்கிறார்கள்: ஸ்டாலினுக்கு நேரில் சென்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு நன்றி

திமுக தலைவர் ஸ்டாலின்

இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது.

 • Share this:
  இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவகங்கை எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாநில செயலாளர் வே.துரைமாணிக்கம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

  இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் அரங்க.சங்கரய்யா, சேலம் மாவட்ட தலைவர் மு.சரவணன், விவசாயிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கிரிதரன், சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அசோக் லோடா, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணகிரி கே.எம்.ராமகவுண்டர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

  அப்போது ஸ்டாலினிடம் அவர்கள் கூறும்போது, எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள், விவசாயிகள் மீது கொண்ட அன்பால், “நான் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்வேன்” என்று அறிவித்தீர்கள். இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை வாய்மூடி இருந்த தமிழக அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

  எப்படியோ இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், என்று கூறினார்கள்.
  Published by:Muthukumar
  First published: