முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் முதலமைச்சர் மீது மட்டுமல்ல; துணைமுதல்வர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் மீதும் சிபிஐ விசாரணை வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் சென்றுள்ளார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாற்றுக்கட்சியை சேர்ந்த பலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், சசிகலா சிறைக்குச் சென்றதால் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையை தனது கையில் வைத்துக் கொண்டு 3,000 கோடி  ரூபாய் வரை உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தியாவிலேயே பதவியில் இருக்கும் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமி மீதுதான் என்று ஸ்டாலின் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர் முதலமைச்சர் மீது மட்டுமல்ல துணைமுதல்வர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் மீதும் சிபிஐ விசாரணை வரும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Also see...

' isDesktop="true" id="61879" youtubeid="78mpKuDLpH8" category="tamil-nadu">

First published:

Tags: ADMK, DMK, Edappadi Palaniswami, Jayalalithaa, MK Stalin