திமுகவில் ஸ்டாலினால் கிளைச் செயலாளர் கூட ஆகி இருக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

திமுகவில் ஸ்டாலினால் கிளைச் செயலாளர் கூட ஆகி இருக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

அன்புமணி ராமதாஸ்

கலைஞரின் மகன் என்ற ஒரு தகுதி ஸ்டாலினுக்கு இல்லையென்றால் திமுகவில் அவர் ஒரு கிளைச் செயலாளர் கூட ஆகி இருக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

 • Share this:
  அதிமுக  கூட்டணிக்கு வாக்களித்தால் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயியான எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழகத்தில் தாயை இழிவாக பேசிய ஆ ராசா மீது மு க ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பினார்.

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மீ.க. செல்வகுமாரை ஆதரித்து, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் மல்லவாடி, வெறையூர், வேட்டவலம் பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில்  வாக்கு சேகரித்த போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், " திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை‌ எதற்காக மீண்டும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

  இந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யாத திமுக வேட்பாளரை புறக்கணித்து படித்த இளைஞரான செல்வகுமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்தத் தொகுதியில் செல்வகுமார் வெற்றி பெற்றால் 70 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி விவசாயி மீண்டும் முதலமைச்சர் ஆவார். கு.பிச்சாண்டி பண முதலை. நமது வேட்பாளர் படித்த ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி.

  ஸ்டாலினுக்கு ஒரு தகுதிதான் உள்ளது, கலைஞருடைய பிள்ளை. இந்த தகுதி இல்லை என்றால் அவர் திமுகவில் ஒரு கிளை செயலாளர் கூட ஆகி இருக்க மாட்டார் என அவர் தெரிவித்தார்.

  எடப்பாடி முதல்வராக ஒரு தகுதி உள்ளது ஏனென்றால் அவர் ஒரு  விவசாயி. விவசாயம் குறித்து அனைத்தும் தெரியும் ஆனால் ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது என்றும் விவசாய நிலத்தில் ஷு போட்டுக்கொண்டு நடப்பார் என விமர்சனம் செய்தார்.

  மேலும் மருத்துவர் ராமதாஸ் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது  முதல் வெற்றி இதனை பெற்றுத்தந்தது மருத்துவர் ராமதாஸ். இதனை வழங்கியது எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்த அவர் பின் தங்கிய அனைத்து சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம் என பேசினார்.

  6 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில் 32 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டு கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று ஒரு தொகுதியில் 104 பேரிடம் மட்டுமே உங்கள் கருத்து கேட்டு கருத்துகணிப்பு வெளியிடு இருக்கிறார்கள். இது கருத்து திணிப்பு என விமர்சனம் செய்தவர். அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

  பெண்களை தெய்வமாக பார்க்கும் தமிழகத்தில் பெண்களை இழிவுபடுத்துவது திமுக. திமுக என்றாலே பெண்களை கொச்சைப்படுத்தும். ஆ ராசா ஒரு எம்பி அவரே இவ்வாறு பேசுகிறார் என்றால் மற்ற திமுகவினர் எவ்வாறு பேசுவார்கள் என் கேள்வி எழுப்பி அவர் தாயைப் பற்றி இழிவாக பேசிய ஆ ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

  மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாரா குறித்து அவதூறாக பேசிய ராதாரவி மீது ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்தார் என விமர்சனம் செய்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் தான் நடைபெறும் என பேசியவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி கொடுத்து 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது ஆனால் எந்த விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை என விமர்சனம் செய்தவர்.

  தற்பொழுது எடப்பாடி ஆட்சியில் தான் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது பேசிய அவர் ஸ்டாலின் வாராரு அல்வா தர போறாரு என விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்போது மருத்துவ படிப்பு படித்து வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என்றும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  திருவண்ணாமலை செய்தியாளர் சதீஷ்
  Published by:Arun
  First published: