எஸ்.பி.ஐ. வங்கி கிளர்க் தேர்வில் உயர்சாதி ஏழைக்கு 28 கட் ஆப் மார்க் - மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

திமுக தலைவர் ஸ்டாலின்

முதல் நிலை தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 200 மதிபெண் கொண்ட பிரதான தேர்வு, வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
எஸ்.பி.ஐ. வங்கி கிளர்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண் 28-ஆக அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில், கிளார்க் எனப்படும் ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கான தேர்வு 2 கட்டமாக நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூன் 22, 23 மற்றும் 30-ம் தேதிகளில் முதல்நிலை தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

காலியாக உள்ள 8,693 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது.

அத்துடன், 2-வது கட்டமாக நடைபெறும் பிரதான தேர்வில் பங்கேற்பற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,100 மதிப்பெண்-க்கு,  தாழ்த்தப்பட்ட பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணாக 61.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி. எனப்படும் பழங்குடியினர் பிரிவினருக்கு 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈ.டபிள்யூ.எஸ். (EWS) எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி ஏழை பிரிவினருக்கான கட்-ஆஃப், 28.5 விழுக்காடாக உள்ளது. முதல் நிலை தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 200 மதிபெண் கொண்ட பிரதான தேர்வு, வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளர்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண் 28-ஆக அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர்சாதி ஏழைகளுக்கு 28 கட் ஆப் மதிப்பெண்கள் இருந்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியை பாஜக குழி தோண்டி புதைத்திருப்பதை காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக் கனியாக இருக்கும் நிலையில், இதை மேலும் தகர்க்கும் 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை தூக்கியெறிய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...  EXCLUSIVE நேற்றைய அரிவாள்வெட்டு தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்கிய ரூட்தல கேங்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: