ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கலைஞர் சிலை வைக்க இடத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான்.. அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கலைஞர் சிலை வைக்க இடத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான்.. அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கலைஞர் சிலை வைக்க இடத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான் - அமைச்சர் துரைமுருகன்

கலைஞர் சிலை வைக்க இடத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான் - அமைச்சர் துரைமுருகன்

முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான், ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கலைஞர் சிலை வைக்க இடத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான், அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார் என அமைச்சர் துரைமுருகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திமுகவின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்புக்கு பின் கலைவாணர் அரங்கில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுவொரு பெருநாள், மகிழ்ச்சியான நாள். சிலையை பார்த்து நெஞ்சம் உருகிவிட்டது. நம்முடன் கலைஞர் நேரில் பேசுவதை போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து கண்ணீர் வடிக்காமல் வரமுடியவில்லை கலைஞர் சிலையை எங்கே வைக்க வேண்டும், ஏன் வைக்க வேண்டும் என நினைத்து ஓமந்தூரார் வளாகத்தை தேர்வு செய்தது ஸ்டாலின் தான். அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார்.

முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான், ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான். அண்ணா சாலையில் காமராஜர் சிலை, பெரியார் சிலை, அண்ணா சிலை இருக்கும் நிலையில், கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் சிலையை வெங்கையா நாயுடு வந்தது திறந்து வைத்தில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Duraimurugan, Karunanidhi statue