முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் அ.தி.மு.க ஆட்சி எனவும், பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் கூட அ.தி.மு.க அரசு ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
இதற்கெல்லாம் நான்கு மாதங்களில் தண்டனை வாங்கித் தரும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டு வந்தால், எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்