கோடநாடு கொள்ளைகளின் பின்னணி என்ன? - ஸ்டாலின் விளாசல்

திமுக தலைவர் ஸ்டாலின்

விசாரணை வலையத்தில் இன்றைய முதல்வர் மட்டுமல்லாது தமிழக அமைச்சகர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோரையும் இணைக்க வேண்டும்: ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
கோடநாடு வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவம் மற்றும் தொடர் மரணங்களின் பின்னணி என்ன? என விசாரணை வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். சந்திப்பில் அவர் பேசியபோது, “கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா?

கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மற்றும் நாட்டின் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். ஆளுநரும் குடியரசுத் தலைவரும் கோடநாடு விவகாரத்தில் தலையிட்டு விசாரிக்க வேண்டும்.

கோடநாடு விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையெனில் வழக்கும் தொடர்வோம். இந்த விவகாரத்தில் சரியான எந்தப் பதிலையும் தராத முதல்வர் வழக்குப் பதிந்துள்ளாக மட்டும் கூறுகிறார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்.

அதுவும், விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் தலைமையில் நடைபெற வேண்டும். விசாரணை வலையத்தில் இன்றைய முதல்வர் மட்டுமல்லாது தமிழக அமைச்சகர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோரையும் இணைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: கோடநாடு குற்றச்சாட்டும்... முதல்வர் விளக்கமும்...
Published by:Rahini M
First published: