ஸ்டாலினும், தினகரனும் அரசியலில் சின்னதம்பிகள்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் சின்னதம்பி யானைபோல் நாட்டிற்குள் வராமல் இருப்பதே நல்லது என்றார் ஜெயக்குமார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டாலினும், தினகரனும் அரசியலில் சின்னதம்பிகள் என்று மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

  அண்ணாவின் 50-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அரசியலின் சின்னதம்பி யானைகள்.

  அவர்கள் இருவரும் சின்னதம்பியைப் போல் நாட்டிற்குள் வராமல் இருப்பதே நல்லது. கொள்ளையடித்த பணத்தை வைத்து டிடிவி தினகரனும், தந்தையின் கட்சியை வைத்து ஸ்டாலினும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவர்களால் அரசாள முடியாது, அரசாளக் கூடாது.

  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அரசியலில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் ஒரு பாசமிகு குடும்பமாக அதிமுக இயங்கி வருகிறது. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றுபட்டிருக்க காரணம், அண்ணா காட்டிய வழிதான்.

  அதிமுகவிற்கு ஒட்டுமொத்தமாக துரோகம் இழைத்த குழுதான் டிடிவி தரப்பினர். நோட்டாவை விட அவர்கள் அதிகமாக வாக்குகள் வாங்கினால் அதுவே ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.

  அதிமுக தனியாக தேர்தலில் போட்டியிட்டதுண்டு. ஆனால் திமுகவிற்கு தனியாக தேர்தலில் போட்டியிட்ட வரலாறு கிடையாது என்றார் ஜெயக்குமார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: