• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டாலின் செயல் அரசியல் சார்ந்து இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு

ஸ்டாலின் செயல் அரசியல் சார்ந்து இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக என்றும் கொள்ளப்புறத்தைத் தேர்ந்தெடுக்காது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்டாலின் செயல் அரசியல் சார்ந்து இல்லை, சினிமா சார்ந்ததாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

    வடசென்னை அதிமுக வேட்பாளர் மோகன்ராஜ் தலைமையில் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயவர்தனை ஆதரித்து இன்னும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் என் பிள்ளை தானாய் வளரும். கூட்டணி தர்மத்தின் படி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்’’.

    ‘கமலஹாசன் தென்சென்னையில் போட்டியிட்டால் ஜெயவர்தன் வெற்றி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு’,  ‘‘அதிமுகவின் வாக்கை யாராலும் கைப்பற்றப்பட முடியாது. அவர் தென்சென்னையில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதி. இதில் கமலஹாசன் காணாமல் போய்விடுவார்’’.

    ‘ஆறுமுகசாமி விசாரணை குறித்து ஸ்டாலின் கருத்துக்கு’,  ‘‘ஸ்டாலின் செயல் அரசியல் சார்ந்து இல்லை, சினிமா சார்ந்து தான் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அதன் அறிக்கைப்படி தண்டனை நிச்சயம் கொடுக்கப்படும்.

    அதிமுக என்றும் கொல்லைப்புறத்தைத் தேர்ந்தெடுக்காது. அது குருட்டு திமுகவின் வழியே. 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலுமே அதிமுக மகத்தான வெற்றி பெரும்’’.

    ’கோடநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு’, ‘‘நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஜாமின் அளித்தது திமுக தான். திமுக ஏன் இதைச் செய்திருக்கக்கூடாது என்று மக்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அதற்கும் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.  ஜெயவர்தனை ஆதரித்து நிச்சயம் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று’’ அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    மேலும் பார்க்க: 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: