Home /News /tamil-nadu /

BREAKING | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு

BREAKING | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Public Exam | அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தை அடுத்து முதல்வர் வீடியோ வாயிலாக பொதுத்தேர்வு தொடர்பாக உரையாற்றினார். அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், ஒத்திவைக்கப்பட்ட 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

    பிளஸ் 2 மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.



    Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Sankar
    First published:

    Tags: Public exams, SSLC

    அடுத்த செய்தி