ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேர்தலால் பிசியாகிப்போன பிரியாணி கலைஞர்கள்...

தேர்தலால் பிசியாகிப்போன பிரியாணி கலைஞர்கள்...

தேர்தலால் பிசியாகிப்போன பிரியாணி கலைஞர்கள்...

மக்களே இல்லாமல் கூட தேர்தல் பரப்புரை நடக்கக் கூடும். ஆனால் பிரியாணி இல்லாத பரப்புரையை பார்ப்பதே அபூர்வம். தொண்டர்களை குஷிப்படுத்த பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் அரசியல் கட்சிகள் ஆர்டர் மேல் ஆர்டராக கொடுத்து வருகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

அரசியல்கட்சி கூட்டங்களுக்கு கட்சியினரை அழைத்துச்சென்றால் பிரியாணி வாங்கித்தர வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அதனால்தான் தேர்தல் களத்தில் புதிதாக முளைத்த தலைவர்களும், 100 விழுக்காடு தூய்மை பேசும் தூய்மைவாதிகளும், பிற கட்சிகளின் அரசியல் கூட்டங்களை கண்டு, பிரியாணிக்கு கூட்டி வந்த கூட்டம் என்ற விமர்சிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் தேர்தல் நேர அரசியல் கூட்டங்களில் பிரியாணி கோலோச்சும் நிலையில், அதற்கென்றே பெயர் பெற்ற ஆம்பூர், வாணியம்பாடியில் கேட்கவே வேண்டாம்.. இந்த பகுதிகளில் பிரியாணி கடைகள் ஒருபுறம் நிறைந்திருக்க, ஆர்டரின்பேரில் பிரியாணி தயாரித்து தருபவர்கள் தற்போது படு பிசியாகி விட்டனர். அரசியல் கூட்டங்களின் நேரத்திற்கு ஏற்ப, அண்டா அண்டாவாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி தயாராகிக் கொண்டே இருக்கிறது.

அந்தந்த பகுதி கட்சி பிரமுகர்கள் வாக்குசேகரிக்கும்போது தினந்தோறும் நூறு, இருநூறு என ஆர்டர்கள் தருகின்றனர். தலைவர்கள் முகாமிடும்போது ஆயிரம், இரண்டாயிரம் பொட்டலங்களுக்கு ஆர்டர்கள் குவிவதாக கூறுகிறார்கள் பிரியாணி மாஸ்டர்கள்.

மேலும் படிக்க... திருப்புமுனை: மத்தியில் ஆட்சி கலைய காரணமாக அமைந்த தேநீர் விருந்து

எத்தனை பெயர்களில் பிரியாணிகள் வந்தாலும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படும் பிரியாணிக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Biryani, Election Campaign, TN Assembly Election 2021