அத்திவரதர் தண்ணீரில் வைக்கப்பட்டது பற்றி கருத்து - ஆதாரம் தரத்தயார் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் போலீஸ் சம்மனுக்கு பதில்

”எந்த இடத்திலும் எந்த மதங்களையும் இழிவுபடுத்துவது எங்களது நோக்கம் அல்ல”

news18
Updated: August 19, 2019, 4:56 PM IST
அத்திவரதர் தண்ணீரில் வைக்கப்பட்டது பற்றி கருத்து - ஆதாரம் தரத்தயார் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் போலீஸ் சம்மனுக்கு பதில்
சடகோப ராமானுஜ ஜீயர்
news18
Updated: August 19, 2019, 4:56 PM IST
மத உணர்வுகளை பாதிக்கும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவரது தரப்பில் இருந்து பதில் விளக்கம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன வைபவம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு பயந்து  அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைத்ததாகவும்,  45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை  தற்போது புதைக்க தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார்.


மேலும்  இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிடப்போவதாகவும் அதற்கான முயற்சியை தான் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்திரவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது எனவும் சடகோப ராமானுஜர் குறிப்பிட்டார்.

அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு புகார் அளித்தார்.

Loading...

இதன் அடிப்படையில் சடகோப ராமானுஜர் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும்படி காவல்துறை தாப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஜீயர் தரப்பில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநில இளைஞரணி அமைப்பாளர் சரவண கார்த்திக் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி ஜீயர் எழுதிய விளக்க கடிதத்தை அளித்தார்.

அதில், தான் 1600-ம் ஆண்டு காலகட்டத்தில் முகலாயர் படையெடுப்பில் அத்தி வரதரை குளத்தில் வைக்கப்பட்டார். அது தற்போது தேவை இல்லை எனவும் என்ற கருத்தை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த இடத்திலும் எந்த மதங்களையும் இழிவுபடுத்துவது எங்களது நோக்கம் அல்ல என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் நான் கூறிய கருத்து இருக்கு ஆதாரத்தை தங்களிடம் தருவதாகவும் ஜீயர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...