ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

மாதவ ராவ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.

 • Share this:
  ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் நுரையிரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாதவராவ் போட்டியிட்டார்.

  அவர், 1987-ம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனைக் குழு துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிவகித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பாதிப்பின்போதே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

  நுரையீரல் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவராவ் சார்பாக அவருடைய மகள்தான் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். மாதவராவ்வுக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளிவந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மதுரை அப்போலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: