Home /News /tamil-nadu /

நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்

நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்

ஜாகிர் உசேனிடம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்தான் வாக்குவாதம் செய்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து நேற்று துரத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரது பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீ ரங்கம் கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜாகிர் உசேன், ''நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன். காரணம் என் பெயர்.

    முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது.

    என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல . இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன்.

    காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை'' என்று கூறியிருந்தார்.

    இன்று விளக்கம் அளித்த அவர், ''நான் 8 வயது முதலே திருச்சி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் முதன் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    ரங்க ராஜன் என்பவர்தான் திட்டமிட்டு இதனை செய்துள்ளார். மற்ற நிர்வாகிகள் யாரும் என்னை தடுக்கவில்லை. மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இதை சீர்குலைப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டதற்கு கோயில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் யாரும் ஜாகிர் உசேனை தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜாகிர் உசேனிடம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்தான் வாக்குவாதம் செய்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்டதை தொடர்ந்து ஜாகிர் உசேனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Srirangam

    அடுத்த செய்தி