ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்

மாதிரிப் படம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  • Share this:
நூற்று எட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் 50வது ஜீயராக இருந்த ஸ்ரீ நாராயண ஜீயர் கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து இன்னும் புதிய ஜீயர் நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் 51வது ஜீயர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்பதவிக்கு தகுதியுடையோர் வரும் ஜுன் 8ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு,  இந்து மத தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்த, சந்நியாசம் பெற்ற கோயில் ஆகமங்களையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவோர் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் 56(1) பிரிவின் கீழ் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர், கட்டுப்படுத்தக் கூடியவர் என்றும் குறிப்பிடப்பட்டு, ஸ்ரீீீீரங்கம் கோயில் செயல் அலுவலர், இணை ஆணையர் மாரிமுத்து & அறங்காவலர்கள் குழு பெயரில் கடந்த 6ம் தேதியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பும் தகுதி, மாதிரி விண்ணப்ப படிவும் ஆகியவை கோயில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அரசே நேரடியாக ஜீயரை நியமிக்க இந்து கோயில் பாதுகாப்பு இயக்கம், வி.எச்.பி, பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், சட்டப்படியும் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டும் ஜீயர் நியமனம் நடைபெறும். எந்தவித விதி மீறலும் இல்லை  என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்பு, திரும்ப பெறப்பட்டுள்ளது. இணையதளத்தில் இந்த அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Yuvaraj V
First published: