Home /News /tamil-nadu /

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர்

சுமார் 34% மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
தொழில் துறையின் தலைநகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி 1967-ம் ஆண்டு அறிமுகமானது.

இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக தி.மு.க 7 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகள் தலா 3 முறை தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இறுதியாக நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கே.என். ராமசந்திரன் 5,45,820 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ராமச்சந்திரனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் ஜெகத்ரட்சகன் 4,43,174 வாக்குகள் உடன் தோல்வி அடைந்தார். ம.தி.மு.க-வின் மாசிலாமணி 1,87, 094 வாக்குகளையும் காங்கிரஸின் அருள் அன்பரசு 39,015 வாக்குகளையும் பெற்று தோல்வியைச் சந்தித்தனர்.

15-வது மக்களவைத் தேர்தலில் 66.10% வாக்குகள் பதிவான நிலையில், 16-வது மக்களவைத் தேர்தலில் 66.21% வாக்குகள் மட்டுமே பதிவாகின. சுமார் 34% மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Rahini M
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, North Central Tamil Nadu Lok Sabha Elections 2019, Sriperumbudur S22p05, Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி