ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறை முகாமில் உள்ளவர்களை ஜாமினில் விடுவிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரத போராட்டம்

சிறை முகாமில் உள்ளவர்களை ஜாமினில் விடுவிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி சிறை வளாகத்திலுள்ள முகாமில் உள்ளோரை விடுவிக்கக் கோரி இலங்கை அகதி முகாம்களில் வசிப்போர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அந்த வழக்கு முடிந்தும் தங்களை சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தற்காலிக பிணையிலாவது தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி, அவர்கள் கடந்த 8ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் இலங்கைத் தமிழர்கள் 31 பேர்; வங்கதேசத்தினர் உட்பட மொத்தம் 54 பேர் உள்ளனர்.

Also see:

முன்னதாக, முகாம்களில் உள்ளவர்களின் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 17 - 19ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஒரு மாதத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தனித்துணை ஆட்சியர் மற்றும் க்யூ பிரிவு போலீசார் உறுதியளித்திருந்தனர். ஆனால், இப்போதுவரை அவர்களை விடுவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக திருச்சி, புதுக்கோட்டை, தருமபுரி, ஈரோடு உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் குடும்பத்தினர், உறவினர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு முகாமில் உள்ள தங்களது குடும்பத்தினரை விடுதலை செய்யக்கோரி கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Published by:Rizwan
First published:

Tags: Srilankan Refugees, Trichy