இலங்கை தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ விரும்பமாட்டார்கள் - வெங்கையா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

 • Share this:
  இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள் என்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

  சென்னை ஐஐடியில் "2020 முதல் 2030 வரை இந்தியா" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள் என்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

  மேலும், சிஏஏ, என்பிஆர் குறித்து முழுமையாகப் படித்து, அதன் பின்னணியைத் தெரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் மக்கள் தங்கள் செயல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

  நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில், மக்களிடையே ஆதரவு பெற முடியாத சிலர் சுய லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி மக்களை திரட்டுவதாகத் தெரிவித்தார். இன்று தலைவர்களாக உருவாக சிலர் எளிமையான வழியாக பணம், சாதி, குற்றப் பின்னணி, மதம் போன்றவற்றைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்தார்

  அனைவரும் இந்தி படிக்க வேண்டும்; தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும்; விருப்பப்பட்ட மொழிகளையும் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Also see:
  Published by:Rizwan
  First published: