• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கட்டில் வீரரின் ட்ரவுசரைக் கழற்றிய ‘பேட்ட காளை’

ஜல்லிக்கட்டில் வீரரின் ட்ரவுசரைக் கழற்றிய ‘பேட்ட காளை’

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ராஜேஸ் என்ற அந்த வீரர், “ஜல்லிக்கட்டில் காளையின் செயல்பாடு டி20 கிரிக்கெட் போட்டியைப் போல, குறுகிய நேரம் என்றாலும் காளை வந்து தனி முத்திரை பதிக்கும்” என்று கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவரின் ட்ரவுசர் காளையின் கொம்பில் சிக்கி கழன்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த காளை இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானுக்கு சொந்தமான காளை என்று தெரியவந்துள்ளது.

    உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. 729 காளைகளுடன், 691 வீரர்கள் களமிறங்கினர். பல காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி மிரட்டியபடி தப்பிச் சென்றன.

    இந்தப் போட்டியில் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானின் காளையும் களமிறங்கியது. வாடிவாசலில் இருந்து துள்ளி வெளி வந்து களத்தில் நின்று விளையாடிய இந்த காளையை அடக்க வீரர்கள் பலரும் முயன்றனர். யாராலும் பிடிக்க முடியாமல் திணறிய நேரத்தில் ஒரு வீரர் மட்டும் மாட்டின் திமிலை பிடிக்க முயன்றார். அவரை காளை முட்டி மோதியது.

    அப்போது, எதிர்பாராத விதமாக வீரரின் மஞ்சள் நிற ட்ரவுசர் காளையின் கொம்பில் சிக்கி கழன்றது. தனது டவுசரை மாட்டின் கொம்புகளிடம் பறி கொடுத்தாலும், மீண்டும் புதிய ட்ரவுசர் வாங்கி அணிந்து கொண்டு திரும்பிய அந்த வீரர், மேலும் சில மாடுகளைப் பிடித்துக் காட்டி தனது வீரத்தை மெய்ப்பித்தார்.

    ராஜேஸ் என்ற அந்த வீரர், “ஜல்லிக்கட்டில் காளையின் செயல்பாடு டி20 கிரிக்கெட் போட்டியைப் போல, குறுகிய நேரம் என்றாலும் காளை வந்து தனி முத்திரை பதிக்கும்” என்று கூறியுள்ளார்.

    இணையத்தில் வைரலான அந்த வீடியோவுக்கு பலரும் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்டுருவேன்’ என்ற வசனம் இந்த காளைக்கு பொருந்துவதாக ஒருவர் கூறியுள்ளார்.

    Also See..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: