ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு விதிப்படி குடியுரிமை.. சாத்தியக்கூறு குறித்து பேசிய மதுரை கோர்ட்!

இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு விதிப்படி குடியுரிமை.. சாத்தியக்கூறு குறித்து பேசிய மதுரை கோர்ட்!

மாதிரி படம்

மாதிரி படம்

னுவை மத்திய உள்துறை செயலாளர் 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகள் உள்ளிட்டோருக்கு விதிப்படி இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

  திருச்சியை சேர்ந்த அபிராமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனுவில் இந்திய குடியுரிமை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு தான் அனுப்பிய மனுவை மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

  இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் வழித்தோன்றல் என்றாலும் இந்தியாவில்தான் பிறந்துள்ளார் என தெரிவித்தார்.அபிராமி ஒருபோதும் இலங்கை குடிமகளாக இல்லாத நிலையில், அதை துறக்கும் கேள்வி எழவில்லை என்ற நீதிபதி மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அவருக்கு நாடற்ற நிலை ஏற்படும் என கூறினார்.

  இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊருக்கு பஸ்ல போறீங்களா..? கோயம்பேடு போகும் முன் இதை படிங்க

  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை இல்லாவிட்டாலும், அதே கொள்கை அபிராமிக்கும் பொருந்தும் என்ற நீதிபதி, அபிராமி அளித்த மனுவை மத்திய உள்துறை செயலாளர் 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Madurai High Court, Srilankan Tamil