Home /News /tamil-nadu /

இலங்கை அரசால் படகுகள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5.66 கோடி மதிப்பில் நிவாரணம் அறிவிப்பு

இலங்கை அரசால் படகுகள் பறிமுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5.66 கோடி மதிப்பில் நிவாரணம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் விதமும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் வீதமும் மொத்தம் 5.66 கோடி வழங்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
    இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு ,மற்றும் நாட்டுப் படகுகளின்  உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5.66 கோடி மதிப்பில் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு க ஸ்டாலினை கடந்த ஜனவரி 20ம் தேதி  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர்.மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

    அதனடிப்படையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் நேற்று வெளியிட்டார். இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் விதமும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் வீதமும் மொத்தம் 5.66 கோடி வழங்கப்படும்.

    கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இழப்பீடாக ரூபாய் 5.66 கோடி வழங்கப்படும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்கள்.

    மேலும் படிக்க: கோவையில் 5 நாட்களாக தண்ணி காட்டிய சிறுத்தை கூண்டில் சிக்கியது...

    கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எம்பிக்கள் மூலம் வலியுறுத்தி எதையும் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் விளக்கிக் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணை தலைவர் கனிமொழியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன் மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: 'பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Fishermen, MK Stalin, Srilanka

    அடுத்த செய்தி