• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Youtube Video

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • Share this:
    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டியடித்தனர். நாகை மீனவர்களிடம் வலைகளை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள், தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    டீசல் விலையை குறைக்க வேண்டும், மீன்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள், 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சனிக்கிழமை கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கற்களை வீசி மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும், மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தினர்.

    தங்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருவதாகவும், அதை தடுக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், ரவீந்தர் உள்ளிட்ட 10 மீனவர்கள் 2 பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 9 பேர் கொண்ட இலங்கை கடற் கொள்ளையர்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். மேலும் படகில் இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

    இதையடுத்து காயங்களுடன் கரை திரும்பிய 10 மீனவர்களும், சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நாகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏற்கனவே தரங்கம்பாடி மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: