Home /News /tamil-nadu /

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக வரவேற்பு!  

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக வரவேற்பு!  

அண்ணாமலை

அண்ணாமலை

Srilanka Crisis | இலங்கை போரின்போது மனிதாபிமானமற்ற செயல்களை, அப்போதைய மத்திய அரசும் திமுக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக சாடியுள்ளார்.

    இலங்கைக்கு அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுப்பி வைக்கும் என நம்புவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    முன்னதாக, கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு அரிசி, மருந்து, பால் பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இவற்றை இலங்கை மக்களுக்கு விநியோகிக்க அனுமதி வழங்க வேண்டுமென, மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்குமாறும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமரின் மேலான கவனத்திற்கு அனுப்பவும் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில், தமிழக அரசின் தீர்மானத்தை பாஜக வரவேற்பதாக, அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதே சமயம், இலங்கை போரின்போது மனிதாபிமானமற்ற செயல்களை, அப்போதைய மத்திய அரசும் திமுக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக சாடியுள்ளார்.

    இதையும் படிங்க - இன்று டாஸ்மாக் விடுமுறை... நேற்று ஒரே நாளில் ₹252.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, அந்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணம் மற்றும் உதவிகளை புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி, இலங்கை மக்களுக்கு உதவுவதை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைக்கும் என நம்புவதாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, MK Stalin

    அடுத்த செய்தி