இலங்கையில் அரசுக்கு எதிரான போக்கு தீவிரம் அடைந்துவரும் நிலையில், மகிந்த ராஜபக்சே தப்பி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் மகிந்த ராஜபக்சேவையும் குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்களன்று போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. கடந்த 2 தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஆளும் கட்சி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். 220-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பூர்வீக வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததையடுத்து ராஜபக்சே அலரி மாளிகையில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வெளிநாடுக்கு தப்ப முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கலவர பூமியான "இலங்கை".. அலரி மாளிகையில் இருந்து தப்பிச்சென்ற ராஜபக்சே - விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்
இந்நிலையில், இந்த சூழல் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு" என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahinda rajapaksa, Poet vairamuththu, Prabhakaran, Srilanka