இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழந்தோருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

உயிரிழந்தோருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

இலங்கை குண்டு வெப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னையில் அஞ்சலி செலத்தினர்.

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், SDPI கட்சி துணை தலைவர் தெஹலான் பாகவி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும், இலங்கை குண்டு வெப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் மதங்கள் ரீதியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சி தலைவர்கள்


இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியை செலுத்தினர்.

Also see... இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு


Also see... EXCLUSIVE | இலங்கை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியா உதவி


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: