முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துண்டான விரல்கள்.. கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல்.. தப்பிவந்த தமிழக மீனவர்கள் ஷாக் தகவல்!

துண்டான விரல்கள்.. கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல்.. தப்பிவந்த தமிழக மீனவர்கள் ஷாக் தகவல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்திய கடல் எல்லையிலேயே இலங்கை கடற்கொள்ளையர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த முருகன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14 ம் தேதி 6 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்தெரிந்தும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றதாக தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகின்றனர். அவர்களை சகமீனவர்கள் உதவியோடு புஷ்பவனம் கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் துண்டான மீனவர் முருகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மீதமுள்ள 5 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய கடல் எல்லையிலேயே இலங்கை கடற்கொள்ளையர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Fisherman