• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

மீனவர்கள்

மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைப்பிடித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கிறிஸ்து என்பவருக்கு சொந்தமான படகில் நான்கு மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்தனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜாராம், ராகுல், லெட்சுமணன், அருள், பாளையா, அருளரசன் ஆகியோர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கடலில் தமிழகத்தின் எல்லையைத்  தாண்டி இலங்கைக்குள் வந்ததாக 6 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: