இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேர் விடுவிப்பு... படகுகளுடன் மீனவர்களை விடுத்தது இலங்கை அரசு

கோப்புப் படம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரை படகுடன் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.

 • Share this:
  கடந்த புதன்கிழமை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள், நாகையைச் சேர்ந்த 20 பேர், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் சங்கத்தினர் அவசர ஆலோசனை மேற்கொண்டதுடன் , இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிடவில்லையெனில் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தனர்.

  இந்நிலையில் இந்திய அரசு சார்பில் கொழும்பில் உள்ள தூதரகத்துக்கு அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசு படகுகளுடன் விடுவித்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ராமேஸ்வரத்திற்கு 20 பேர் வந்துசேர்ந்துள்ளனர். காரைக்கால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் வருவார்கள் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க... ஐ.நா மாநாட்டில் ஆதரவாக செயல்பட்ட இந்தியாவுக்கு பாராட்டுகள் - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: