• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டீ குடிக்க வந்த முதியவரை ஆட்டோவில் கடத்திச் சென்று கத்திமுனையில் கொள்ளை!

டீ குடிக்க வந்த முதியவரை ஆட்டோவில் கடத்திச் சென்று கத்திமுனையில் கொள்ளை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆட்டோவில் வந்த இருவர் வழிகேட்பது போல சுப்ரமணியனை அருகே வர சொல்லி, அவர் அருகே வந்தவுடன் அவரை விடாப்பிடியாக ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை திருவான்மியூரில் டீ குடிக்க வந்த முதியவரை ஆட்டோவில் கடத்திச் சென்று கத்திமுனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாபனாசத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (70). இவர் திருவான்மியூரில் உள்ள தனது மகனின் வீட்டில் தங்கியபடி சென்னையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டீ கடையொன்றில் டீ குடித்துவிட்டு சாலையோரமுள்ள நடைமேடையில் அமர்ந்திருந்தார்.

    அப்போது ஆட்டோவில் வந்த இருவர் வழிகேட்பது போல சுப்ரமணியனை அருகே வரச் சொல்லி, அவர் அருகே வந்தவுடன் அவரை விடாப்பிடியாக ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். பின்னர், அவர்கள் சுப்ரமணியனின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்து 2 மோதிரம் மற்றும் ஒரு செயின் என 3 சவரன் நகையை பறித்துள்ளனர்.

    பின்னர் அவரை தாக்கிவிட்டு இதை வெளியில் சொன்னால் வீடு தேடிவந்து கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். பின்னர், அவர்கள் சுப்ரமணியனை வேளச்சேரி அருகே சாலையோரத்தில் இறக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: