• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறுத்தது, நீதிமன்றம் அனுமதித்தது: இளம் வீராங்கனையின் சட்ட போராட்டம்..

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறுத்தது, நீதிமன்றம் அனுமதித்தது: இளம் வீராங்கனையின் சட்ட போராட்டம்..

தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான சமீஹா பர்வீன், சிறு வயது முதலே செவி திறன் குறைபாடு உடையவர், ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த 7 வருடங்களாக மாநில அளவில் காது கேளாதோர்க்கு நடைபெற்ற பல்வேறு தடகள போட்டிகளில் வெற்றிபெற்று தங்கப்பத்தகம் வென்றுள்ளார்.

இந்த நிலையில் போலந்து நாட்டில் நடக்கவிருக்கும் 4வது சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி இருந்தும், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பதால், விளையாட்டு மேப்பாடு ஆணையத்தால் புறக்கணிக்கப்பட்டார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய விளையாட்டு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சமீஹா இந்த ஆண்டு கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் செவி குறைபாடு உடையோருக்கு நடக்கவிருக்கும் சர்வதேச தடகள போட்டிகளில் சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீஹாவின் உறவினர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது அவசர வழக்காக எடுக்கப்பட்டது.

Also read: பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அறநிலையத்துறை!

செவித்திறன் குறைப்பாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டது, இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டார்.

தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2018 ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்றுள்ள சமீஹாவிற்கு ஏன் அனுமதி மறுக்கபட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதி மகாதேவன், தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என வேதனை தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க அழைத்து செல்ல உத்தரவிட்டு, நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பான நகலை சமீஹா பர்வீன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வரும் 16ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சர்வதேச போட்டியில் பங்குபெற அனைத்து தகுதி இருந்தும், நீதிமன்றத்தை நாடி தான் நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயங்களை பெற வேண்டியுள்ளது, இது என் மகளின் கனவு, ஆசை. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது போல வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது" என கண்ணீர் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சமீஹாவின் தாய் முஜீப் சுஹைல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: