ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு கேபிளில் இலவசம்.. கால்பந்து ரசிகர்களுக்காக அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு

அரசு கேபிளில் இலவசம்.. கால்பந்து ரசிகர்களுக்காக அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு

அரசு கேபிள்

அரசு கேபிள்

தமிழ்நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப செய்தியை அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கிக்கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரஸ்யமாக போட்டிகள் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப செய்தியை அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் ‘தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Arasu Cable, Cable Tv