• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பள்ளிக் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசமுடியவில்லை.

    எனவே, பள்ளி முடிந்த பிறகு 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேர வகுப்பும், 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் அரை மணி நேர ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.

    இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழ் வழியில் பயிலக்கூடிய ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலம் பேச முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, இது நல்ல முயற்சி என பாராட்டினார்.

    Also read: ஜெயலலிதா பெயர் இருப்பதால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை - வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையில் மொத்தம் இருபத்தி எட்டு அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். திசைதோறும் திராவிடம் - தமிழின வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் பொன்னியின் செல்வம் உள்ளிட்ட நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் வெளியிடப்படும்.

    ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள தலைசிறந்த நூல்களை இரண்டு கோடி மதிப்பில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும்.

    குழந்தை எழுத்தாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கத்துடன் கவிமணி விருது வழங்கப்படும். வழிகளில் பாரம்பரிய கலைகள்.

    கரகாட்டம் கும்மி சிலம்பாட்டம் மயிலாட்டம் காவடியாட்டம் பண்ணிசை நாட்டுப்புறப்பாட்டு போன்ற தமிழரின் பாரம்பரிய கலை வடிவங்களை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் கிராமப்புறங்களில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: