முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நியூஸ் 18 செய்தி எதிரொலி... கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

நியூஸ் 18 செய்தி எதிரொலி... கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றி கர்ப்பிணிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் இறந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களாக கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரியில் அரசுமருத்துவனைகளில் பணியில் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவகல்வி இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த விவாகரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  குழுவில் உதவி மருத்துவபணிகள் இயக்குனர் ஹரிசுந்தரி, இரத்த மாற்று சிகிச்சை வல்லுந‌ர் ஒருவர், மாவட்ட தலைமை மருத்துவர் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க தாமதம் ஏன் என்று நியூஸ்18 தமிழ்நாடு செய்தி ஒளிபரப்பியது. இந்நிலையில், இன்று விசாரணை குழு அமைத்து சுகாதார செயலர் உத்தரவிட்டுள்ளார்.

Also Watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

First published:

Tags: Blood bank, Dharmapuri