முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்

அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி வீட்டு வாசலில் கோலமிட்டு அசத்திய கிராம மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாசலில் கோலமிட்டு தமிழகத்து கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது துளசேந்திரபுரம் கிராமம் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமம் இதுவாகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் அமெரிக்கத் தேர்தலில் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேல் சபைக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் பதவிக்கும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்கத் தேர்தல் முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணி நேற்று தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று துணை அதிபராக வர வேண்டும் என அவரது பூர்வீக கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also read: தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் - 7 பேர் விடுதலை குறித்து அறிவிப்பு வெளியாகுமா?

கடந்த சில தினங்களாக கமலா ஹாரிஸ் குலதெய்வ கோயிலில் கூட்டுப் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம் அன்னதானம் என பல்வேறு வழிபாடுகளைச் செய்து கொண்டாடி வருகின்றனர் அந்த கிராம மக்கள். அந்த வகையில், இன்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அமெரிக்காவின் தேர்தல் நிலவரங்களைப் பார்த்தவாறு உள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருப்பதால் கமலா ஹரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் தங்கள் வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டு கமலா ஹரிஸுக்கு "வீ விஷ் யூ கமலா ஹரிஸ்" என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Kamala Harris, US Election 2020