Home /News /tamil-nadu /

கோவில்களும், குலதெய்வங்களும் தமிழ் பண்பாட்டின் முக்கியமான, பிரிக்கமுடியாத அங்கங்கள்: ஆளுநர் ரவி பெருமிதம்

கோவில்களும், குலதெய்வங்களும் தமிழ் பண்பாட்டின் முக்கியமான, பிரிக்கமுடியாத அங்கங்கள்: ஆளுநர் ரவி பெருமிதம்

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய திருக்கோயில்கள் பலவற்றைச் சுற்றியே நம்முடைய கலையும் பண்பாடும் செழித்துள்ளன - தமிழ்நாடு ஆளுநர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒவ்வொரு குடும்பத்திலும் கிராமத்திலுமாக உள்ள  குலதெய்வங்கள் தமிழ் பண்பாட்டின் முக்கியமான, பிரிக்கமுடியாத அங்கங்களாக உள்ளன என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    76வது சுதந்திர திருநாள் பெருவிழாவை ஒட்டி நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று சுதந்திர தின உரையாற்றினார்.அதில், நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.

    மேலும், வளமிக்க மொழியையும் பண்பாட்டையும் தமிழ்நாடு மக்கள் செல்வங்களாக பெற்றுள்ளதாக தெரிவித்தார். உலகின் வாழ்மொழிகளில், தமிழே தொன்மைமிக்கது என்று தெரிவித்த அவர், பல நூறு ஆண்டுகள் பழைமையானதும், மொழி செழுமையும் வளமையும் கொண்டதாகவும் தமிழ் உள்ளது என்று குறிப்பிட்டார். .

    ” ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய திருக்கோயில்கள் பலவற்றைச் சுற்றியே நம்முடைய கலையும் பண்பாடும் செழித்துள்ளன, நம் திருக்கோயில்களின் கட்டுமான மேன்மைக்கும் அழகியல் மகத்துவத்திற்கும் உலகில் வேறெங்குமே நிகரில்லை .  பண்பாடு மற்றும் ஆன்மீகத்தின் உறைவிடங்களாகவே சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் திருக்கோயில்களைக் கட்டியுள்ளனர்.  ஒவ்வொரு குடும்பத்திலும் கிராமத்திலுமாக, எண்ணற்ற குலதெய்வங்களும் உள்ளனர். இவை யாவும், தமிழ் பண்பாட்டின் முக்கியமான, பிரிக்கமுடியாத அங்கங்களாக உள்ளன’ எனத் தெரிவித்தார்.

     இதையும் வாசிக்க: நோக்கம் நிறைவேறும்வரை நிற்காதீர்கள்’: ஆளுநர் ரவி சுதந்திர தின உரை

    மேலும் ‘இத்தகையதொரு  ஆன்மீகத்தைக் கொண்டே நம்முடைய செவ்வியல் கலை, இசை, பாட்டு, நடனம் ஆகிய யாவும் உருவாகியுள்ளன; உந்துதல் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் காக்கவும் மேம்படுத்தவும் ஆற்றல் பெறச் செய்யவும் நமக்குக் கடமைகள் உள்ளது’ எனவும் அவர் உரையில் குறிப்பிட்டார்.   
    Published by:Salanraj R
    First published:

    Tags: Independence day, RN Ravi, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி