ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநருக்கு எதிரான பேச்சு; பேச்சாளரை தற்காலிகமாக நீக்கம் செய்தது திமுக

ஆளுநருக்கு எதிரான பேச்சு; பேச்சாளரை தற்காலிகமாக நீக்கம் செய்தது திமுக

திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி

திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி

ஆளுநருக்கு எதிராக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி, திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநரை தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி புகார் அளித்துள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளுநர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை வடக்கு மாவட்டதை சேர்ந்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

First published:

Tags: DMK, RN Ravi