ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில்கள் டிக்கெட்கள்

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில்கள் டிக்கெட்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டதால், நேரில் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்கள் சில நிமிடங்கள் விற்றுத்தீர்ந்தன.

பொங்கல் பண்டிகைக்காக சொந்தஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜனவரி 12-ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயிலில் அனைத்து டிக்கெட்களும் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிட்டன.

ஜனவரி 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டன. ஏசி இரண்டாம் வகுப்பில் மட்டும் காத்திருப்பு டிக்கெட்கள் இருந்தன.

ஜனவரி 17ம் தேதி கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில், 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில் சுமார் 500 இருக்கைகள் காலியாக இருந்தன. பெரும்பாலான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டதால், நேரில் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

First published:

Tags: Pongal 2023, Southern railway, Special trains