Home /News /tamil-nadu /

சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

கோப்பு படம்

கோப்பு படம்

விழாக்காலங்களை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாக செல்லும் 30 சிறப்பு ரயில்களின் பயண காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது”. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, "சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து வரும் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இதைப்போல் திருச்செந்தூர்-சென்னை சிறப்பு ரெயில் (06106), திருச்செந்தூரில் இருந்து வரும் 5-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை வந்தடையும்.


    சென்னை எழும்பூர்-காரைக்கால் சிறப்பு ரயில், வரும் 4-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். இதைப்போல் காரைக்கால்-சென்னை சிறப்பு ரயில், வரும் 5-ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னை வந்தடையும்.



    மதுரை-புனலூர் டெய்லி மெயில் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து வரும் 4-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூர் சென்றடையும். இதைப்போல் புனலூர்-மதுரை டெய்லி மெயில் எக்ஸ்பிரஸ், வரும் 5-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு மதுரை வந்தடையும்.


    மேலும் விழாக்காலங்களை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாக செல்லும் 30 சிறப்பு ரயில்களின் பயண காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது”.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Gunavathy
    First published:

    Tags: Chennai thiruchendhur, Karaikal, Special trains

    அடுத்த செய்தி