கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்....

கோப்புப் படம்

கொரோனா காரணமாக போதிய பயணிகள் இன்றி ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்கள் மாவட்டத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது. நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் ரயில் பயணத்தை தவிர்த்தனர். இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. அதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் இல்லாமல் இயங்குவதால் ரயில்வே துறை வருவாய் இழப்பை சந்திப்பதாக அதிகரிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... ஊரடங்கை தளர்த்தும் தமிழ்நாடு அரசு - இறுதிக்கட்டத்தில் 2-ம் அலை

  இந்நிலையில் கொரோனா பரவல் குறைவதையடுத்து மாநில அரசு பல தளர்வுகளை அளித்து வருகிறது. இன்று முதல் 10 சிறப்பு ரயில்களை இருவழிகளிலும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: