• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

தீபாவளிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

  • Share this:
    தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கமான ஒன்று. குறிப்பாக, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் சென்னையிலிருந்து செல்வது வழக்கம். எனவே, ஆண்டுதோறும், பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முதல் நாகர்கோயில் ரயில் நிலையம் வரை சிறப்பு அதிவேக ரயில் 3ம் தேதி இரவு 10.5 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4ம் தேதி காலை 11மணிக்கு சென்றடையும். இந்த ரயில் நாகர்கோயிலில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் சிறப்பு நிறுத்தமாக அரியலூர் மற்றும் மாம்பலம் நிலையத்தில் நின்று செல்லும்.

    மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை வரும் மக்களுக்காக திருநெல்வேலி - சென்னை தாம்பரம் வரையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 7ம் தேதி மாலை 7மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 8ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

    சிறப்பு ரயில்களின் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. இதற்காக சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: